- உள்ளூரில் எளிதாக / அதிகமாகப் பின்பற்றக்கூடிய தொழிலைத் தேர்ந்தெடுத்து அதற்கான அனுபவப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தல்.
- பணி அனுபவச் செயல்பாடுகளைத் தொடக்கப்பள்ளி நிலையிலும், வளர்கல்வி மையங்களிலும் அறிமுகப்படுத்த கல்வி அலுவலர்களுக்கு உதவுதல்.
- பள்ளி ஆசிரியர்களுக்குப் பணி அனுபவத் துறையின் பல்வேறு செயல்களில் பணியிடைப் பயிற்சி அளித்தல்.
- பணி அனுபவம் சார்ந்த கருத்துக்களையும், திறன்களையும் நிறுவனத்தின் பணிமுன் பயிற்சி, பணியிடைப் பயிற்சி, செயல் ஆராய்ச்சி போன்ற செயல்பாடுகளில் அறிமுகப்படுத்துதல்.
- நிறுவனத்தின் சுற்றுப்புறத் தூய்மை, விளையாட்டு மைதானம், தோட்டம் மற்றும் நிறுவனத்தின் சொத்துகள் ஆகியவற்றைப் பேணுதல்.
- சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளையும், பாட இணைச் செயல்பாடுகளையும், ஆசிரிய பட்டயப் பயற்சி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல்.
1,050 total views, 2 views today