- ஆசிரியர் பட்டயக் கல்வி மாணவர்களுக்குக் கல்வி உளவியல், மேலாண்மை மற்றும் அனைத்துப் பாடப்பகுதிகளிலும் தேவையான பயிற்சி அளித்தல்.
- மாணவர் மையக் கல்வியையும், முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு உதவும் கல்வியையும் பயிற்சி வாயிலாகப் பரப்புதல்.
- புதிய கற்பித்தல் முறைகளாகிய பல்வகுப்புக் கற்பித்தல், குழுத்தூண்டல், தானே கற்றல், செயல்வழிக் கற்றல் போன்ற முறைகளிலும், பாடம் சார்ந்த புதிய கற்பித்தல் முறைகளிலும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
- அனைத்து வகையான பள்ளிகளுக்கும் உளவியல் ஆலோசனை வழங்குதல்.
- நுண்ணறிவு நிலையில் வேறுபடும் குழந்தைகளுக்கும், (மீத்திறன் மிக்க குழந்தைகள், மெதுவாகக் கற்போருக்கு சராசரி மாணவர்களுக்கும்) சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கும் கற்பிக்க, பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
- பாட இணைச் செயல்களாகிய அறிவியல் மன்றம், கணித மன்றம், இலக்கிய மன்றம், குழு விவாதம், கருத்தரங்கம், பணிமனை போன்ற கற்றல் அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குதல்.
- அறிவியல் ஆய்வகம், உளவியல் கருவிகள், சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான கருவிகள், கலைக்கல்வி அளிக்கத் தேவையான கருவிகள், விளையாட்டு மற்றும் உடற்கல்விக்குத் தேவையான அனைத்துக் கருவிகளையும் பயன்படுத்தக் கற்பித்தல்.
- புதிய கற்றல் முறைகளை வகுப்பறையில் அறிமுகப்படுத்துதல்
- புதிய கற்றல் முறைகளுக்குத் தக்கவாறு பாடத்திட்டம், பாடக்குறிப்பு, உற்றுநோக்கல் படிவங்கள் புதிய முறையில் உருவாக்குதல்.
- ஆண்டுதோறும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில் “ஆண்டுமலர் ”வெளியிடுதல்.
- மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு பாடங்கள் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு ஆலோசனைகள் வழங்குதல்.
1,588 total views, 4 views today