Educational Technology

  • பாடக்கருத்தைக் கற்பிக்கும் போது கருத்துப்படங்கள், மாதிரிகள், திரையில் வீழ்த்தக்கூடிய துணைக்கருவிகள், விளக்கப்படங்கள், வரைபடங்கள், கதை, உரையாடல் மூலம் கற்பித்தல் போன்ற பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்ற ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்குக் கற்பித்தல்.
  • எளிய குறைந்த செலவிலான, திறனை அடைவு செய்யக்கூடிய துணைக்கருவிகளைத் தயாரித்தல்.
  • வளர்கல்வித் துறையில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்களுக்கு, மாவட்ட கருவூல அலகுடன் இணைந்து பயன்படுத்துவதற்குப் பயிற்சியளித்தல்.
  • நிறுவனத்தின் செயற்கைக் கோள் தொடர்பு, ஒலி- ஒளிஅரங்கு, கணிப்பொறி ஆய்வகம், குறைந்த செலவிலான துணைக்கருவிகள் மற்றும் அனைத்து வகையான வீழ்த்திகள் ஆகியவற்றையும் பராமரித்தல்.
  • மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய கல்வி ஒளிபரப்புகளை (தொலைக்காட்சி, வானொலி) அனைத்துப் பாடங்களுக்கும் தயாரித்தல்.
  • நிறுவனத்தின் அனைத்துப் பயிற்சிகளிலும் ஒலிநாடாப் பதிவான், ஒலிநாடா, வானொலி, தொலைக்காட்சியின் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தயாரித்தல்.
  • குறைந்த செலவிலான துணைக்கருவிகளைத் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பணிமனை நடத்துதல்.
  • கல்வித் தொழில்நுட்பவியல் துறையின் வளங்களை நிறுவனத்தின் பிற துறைகளின் செயல்பாட்டிற்கு வழங்குதல்.

 1,636 total views,  2 views today